உன் நினைவில் நான் இழந்த நித்திரை
நிம்மதி இழந்த நித்திரை !!!
ஏதோ அவ்வபொழுது உன்னை
மறந்து ஒரு சில நொடி உறக்கம் !!!
கனவிலும் உன் நினைவுகள் !!!
என்னை உறங்க விடுவதில்லை !!!
கவலை மறந்த உறக்கம் அல்ல !!!
கவலைகளுடனே உறக்கம் -உன் நினைவில் !!!
என் வீட்டில் கவலை மறந்து
அனைவரும் உறங்கும்
அழகை ரசிக்க -உன்
நினைவில் நான் இழந்த நித்திரை !!!
என்னவென்று சொல்வதடா !!!
உன் நினைவில் நான் விழித்திருக்கும்
நொடிகளின் அழகை !!!
நீயோ உன் வீட்டில்
நிம்மதியான உறக்கத்தில் !!!
நம் காதல் நினைவுகளுடன் !!
உன்னை நேசித்த நொடிகளை
எண்ணிக் கொண்டு !!!
நான் மட்டும் இரவு உறக்கத்தை
தொலைக்கிறேனடா
உன் நினைவில் தினம் தினம்
காதலில் நான் பெற்று வந்த
வரமோ உன் நினைவுகளே
என் நித்திரையாக !!!