இவ்வாழ்க்கை எனக்காக

கனவுகள் ஆயிரம் கண்டேன்
பொழுது போகாமல்...
மன திருப்திக்காக.....
கனவுகள் வென்று விட்டது,
என் நினைவுகளை பொய்த்து விட்டு ,,,,
இவ்வாழ்க்கை தந்த பேரிடர்களால்...

இவ்வாழ்க்கை எனக்காக?????????

தமையனுக்கு கிட்டி,
எனக்கு கிட்டாமல்,
போன 'தாய் பாசம்'...

இக்கவலை பழகி போனது..
புதிதாய் ஒரு வாழ்க்கை.....
பள்ளி படிப்பு முடிந்த
தருணத்தில்...

ஒரு பெண் என்னவளாக....
அவள் எனக்காக,
அவளாக முன் வந்த வாழ்க்கை ...

அவள் வாழ்க்கை எனக்காகவும்,
என் வாழ்க்கை அவளுக்காகவும்,
சித்தரிக்கப்பட்டது...

மாற்றினால் உணர்வின் உச்சமான
என் கோபத்தை
முடிந்த வரை.......

செதுக்க துணிந்தேன்
அவள் வாழ்க்கையை
பொன் சிலையாக..

அவள் செதுக்கி சென்று விட்டால்
காதல் சித்திரமாக என் இதயத்தில்
அவளது நினைவுகளை..

ஆம் காதல் தோல்வியாம்....
காரணம்,
நான் கூறிய ஒரே ஒரு பொய்...
அவளை விட
ஒரு வயது பெரியவன் என்று...

அவளுக்கு தெரியவில்லை,
நான் கூறியது பொய்யல்ல..
அவளுக்காக நான் செய்த தியாகம் அது என்று..
என்னை முதியவனாக்கியது....

இன்று அவள்,
அவள் கணவனோடு
உல்லாசமாக ,
தல தீபாவளியும், பொங்கலுமாக .......

வருந்தாமல்,
வருந்தி கொண்டு இருக்கிறேன் ,
அவள் இல்லாத இவ்வாழ்கைக்காக...

பொய் சிரிப்பால் இவ்வாழ்க்கை
என் நண்பர்களுக்காக.....
சந்தோஷ திளைப்பில்....

எழுதியவர் : Anbu (8-Feb-13, 4:20 pm)
சேர்த்தது : Anbu Kalai
பார்வை : 183

மேலே