காதல்

M......N (ம்எல்ப்இன்)
என்னை நீ இன்னும் விரும்புகிறாய் - நானும் தான்
காதலுக்கு எப்போதும் கல்யாணம் தடைக்கல்லாய் இருப்பதில்லை
கல்யாணம் என்பது சந்ததி பெருக்கத்திற்க்கான ஒப்பந்தம் - அவ்வளவே
மனதிற்க்கான ரசனை என்பது வேறு வாழ்க்கைக்கான சந்தோசம் என்பது வேறு
நமக்கு கல்யாணம் நடக்காததால் நம் காதல் பொய்த்து விட்டது என்று
நான் நினைத்ததேயில்லை
இன்னும் நான் உன்னை காதலித்து கொண்டுதான் இருக்கிறேன்
உன்னை உன் எழுத்தை சில ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டும்
என்ற அவசியமில்லாதது போலத்தான் இந்த காதலும் .

உன் வார்த்தைகள் எனக்கு துணையாய் இருக்கிறது
நல்ல வாழ்க்கையை காட்டுகிறது
பல வடிவமான காதலில் நம்முடையது ஒரு வடிவம்

அன்பு கணவர், மாமியார், மாமனாரோடு சந்தோசமாகத்தான் இருக்கிறேன்
காதலென்பது கல்யாணம் வரை மட்டுமே என்ற
கேவலமான வரையறைகளை தகர்ப்பது எவ்வளவு கடினமாகிறது
காதலை அதன் உச்சத்தை உடற்பகிர்வில் மட்டுமே
நிறுத்தி திருப்தி கொள்ளும் இச்சமூகத்திற்கு காதலின்
உண்மையான உருவை காட்டுவது ரொம்ப சிரமம் M.......N !

காதலென்பது பிரிவிற்கு அப்பாலும் பிரியாமல் இருப்பதுதான்.....

இப்படிக்கு
உன் நினைவில்
R.......A (ர்ஊப்ஆ)

எழுதியவர் : SARUMA (12-Nov-10, 10:43 pm)
Tanglish : kaadhal
பார்வை : 508

மேலே