பாசத்தை தருவாயா ...?
பிஞ்சி விரல் பஞ்சு மலர்போல்
பிடிச்சி நடந்தாய் கொஞ்சும் மகளே
மார்பிலே போட்டுக் கொண்டேன்
மனம் நிறைந்து நான் மகிழ்ந்தேன்
மளமளவென நீ வளந்தாய்....
மணமுடித்து தனி வீடு சென்றாய்
அன்னை அவள் கண் மூடியதால்
அன்பு மகளே உன்னை தஞ்சமடைந்தேன்
அருவருத்து ஒதுக்குகிறாய் - நீ
அன்று தொட்டு விளையாடிய
அன்பான என் உடம்பில்
இன்று எதைக்கண்டு ஒதுங்குகிறாய் ..?
சுருங்கிய தோலையா
காவிபடிந்த பற்கலையா ...?
அதற்கு நான் என்ன செய்வேன்....
பாச மகளே பாரம்மா....
அழுகிய விழி இமையில்
வழியுதம்மா இதயக் கண்ணீர்....!