வாலிப வலி

வேண்டாமென விலக நினைத்தாலும்
நிழலை போல் பின் தொடர்கிறது காதல் !

என் வாலிபமும் காதலென்னும் வலியை
பரிசாய் பெற துடிக்கிறது ,
வலியிலிருந்து வாழ்வை காக்க
காதலை தவிர்க்க நினைக்கும் இதயத்தை
காமமென்னும் ஆயுதத்தால் மெல்ல மெல்ல
கொல்கிறது என் வாலிபம் ..........

பாவம் அது அறியவில்லை ,
இதயத்தை இரவல் கொடுத்து
காதலை பரிசாய் பெற்றால்
அந்த காதல் வாலிபத்தை
வலியாய் மாற்றுமென்பதை.....!!!!!!!!!!!!!

எழுதியவர் : சுரேஷ் (9-Feb-13, 5:34 pm)
பார்வை : 214

மேலே