அப்பா சொல்லை தட்டாதே ...?

நான் என்ன செய்தேன் உனக்கு
ஏன் இந்த தவிப்பு எனக்கு ....?

உருக்கமாய் பேசும் உன் மனம் இன்று,
உதிர்ந்து போன மாயம் தான் ஏனோ?

கிள்ளி பேசும் என் செல்ல கிளியே!
வெள்ளி பணத்திற்கு வழி இல்லாதவன் என்று
தள்ளி போனாயோ?

இல்லை,

கொல்லிக்கு மகன் போதும் என்ற உன்,
தந்தையின் வார்த்தையால் என்னை தவிக்க
விட்டு போனாயோ?......

எழுதியவர் : கவிஞர் இனியவன் (9-Feb-13, 7:07 pm)
பார்வை : 180

மேலே