தந்தையின் தாலாட்டு
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணான என் மகனே
கண் மூடி நீ உறங்கு !
தாயென்று எனைக் கருதி
என் தோளில் நீ உறங்கு !
தனைக் கொன்று உன்னை ஈன்ற
தாயென்றும் நம் துணை இருப்பாள் !
தாயென்று எனைக் கருதி
என் தாலாட்டில் நீ உறங்கு !
கண்ணான என் மகனே
கண் மூடி நீ உறங்கு !
தாயென்று எனைக் கருதி
என் தோளில் நீ உறங்கு !
தனைக் கொன்று உன்னை ஈன்ற
தாயென்றும் நம் துணை இருப்பாள் !
தாயென்று எனைக் கருதி
என் தாலாட்டில் நீ உறங்கு !