பொருளாதாரக் கவிதை (3)

பொருளாதாரக் கவிதை (3)

விறகு ஏங்குகிறது
**************************************
பூரணம்மாவின் வீட்டில் .....!
பூஞ்சனம் பிடித்திருக்கிற‌து விறகு
என்னால் இன்று ஒளி வருமா ..?
ஏங்கிக்கொண்டு இருக்கிற‌து ..விறகு

பூமாலை இட்டவன் காலன் கொண்டு சென்றான்
பூவும் பிஞ்சும் சினுங்குகிறது வெறும் கோப்பையை பார்த்து
இடைக்கு இடையே பகல் விறகு எரியும்
இரவில் விறகுக்கு அமாவாசைதான்

நடுஇரவில் எழுந்து பிஞ்சுமகள்....?
அப்பா எங்கே என்று கேட்டாள்
கேட்கவேண்டிய‌ கேள்வி நானும் கூடத்தான்...!
இரவில் எல்லோருக்கும் பசி ஏற்படுவது வழமைதானே

கொடியதில் கொடியது இளமையில் வறுமை‍
இந்த‌ உலகில் எதுவுமே நிலையில்லை
கொடியது நீங்கும் விடியல் பிறக்கும்
நம்பிக்கையை எண்ணி பூரணம்மா
தூங்கும் நேரத்தில் விழித்துக்கொண்டிருக்கிறாள்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (11-Feb-13, 9:43 pm)
பார்வை : 151

மேலே