பொருளாதாரக் கவிதை (2)

காற்றுள்ள‌ போதே தூற்றிக்கொள்
***************************************************
எதிர்பாராத‌ சம்பளத்தை கை நிறையத்தரும்...!
எதிர்பார்த்த‌ வண்டியையும் வாங்கித்தரும்
எதிர்பார்க்காத‌ அளவுக்கு வாழ்க்கை ஏறும் ..!
அத்தனையும் நீ இரவு பகலின்றி இளமையோடு உழைத்தால்

சற்று உன் திற‌மை குறைந்தால்
சட்டென்று உன்னிடத்தில் புதியவன்
ஆர்முடுகலில் கிடைத்த‌ வசதிகள்
அமர்முடுகலில் குறையும் ....!

விரக்தியடைவாய் வீதிக்கு வருவாய் ...
வேண்டாத‌ பழக்கங்கள் பழகுவாய்
இத்தனைக்கும் காரணம் முதலாளித்துவம்
இதை உலகம் எப்போது உனருமோ...?
இதனால் தான் சொல்கிறேன்....!
காற்றுள்ள‌ போதே தூற்றிக்கொள்

எழுதியவர் : கவிஞர் இனியவன் (11-Feb-13, 9:41 pm)
பார்வை : 115

மேலே