கல்பதித்த நெக்லஸ்

நாள்முழுதும் வேலையினால்
நலிந்திட்ட நாயகன்,
ஆள்முழுதும் சோர்ந்து
அங்கு வரும் வேளையிலே ,
"காழ்சிறிதும் இன்றித் தன்னவள்
தன்னிடம் வருவாளோ?"
என்று எண்ணி ஏங்கியவன் இருக்கையிலே,
கொன்றுவிடும் விழியுடனே கொடியிடையாள் வர,
தாபமொன்று இருக்கையிலே
கோபமும் ஏனோவென்று,
தூபமாய்ச் சொல்லித்
துயிலச் செல்கையிலே,
வில்பதித்த விழியுடையாள்
வீராப்பு கொண்டு,
சொல்பதித்துச் சென்றாளே
கல்பதித்த நெக்லஸ் என்று!!!
பாலு குருசுவாமி

எழுதியவர் : (14-Nov-10, 9:25 am)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 410

மேலே