நிமிர்ந்து நிற்க பழகிக்கொள் ..!

மரத்தில் இருந்து
உதிர்ந்திடும் இலைகளை
நினைத்து மரங்கள்
வாடுவதில்லை
தான் உரமாகிறேன் என்று பெருமைபடுகிறது

மேகங்கள் மழையாய்
மாறுவதால் வானங்கள்
அழுவதில்லை
ஆறாகிறேன் என்று கர்வம் கொள்கிறது

சூரியன் ஓரு
பொழுது மறைவதால்
பூமி சுற்றுவதை
நிறுத்துவதில்லை
நாளாகிறேன் என்று தொழில்படுகிறது

ஆனால் ஏனோ - மனிதா ..?
நீ மட்டும் எதையும் இழந்தால்
இடிந்துபோய் இருக்கிறாயே ...?
இயற்கையில் இருந்து கற்றுக்கொள் ..!
நிமிர்ந்து நிற்க பழகிக்கொள் ..!

எழுதியவர் : கவிஞர் இனியவன் (12-Feb-13, 7:44 pm)
பார்வை : 209

மேலே