சே @ சேகுவேரா @ போராளிகளின் தந்தை...

உனக்குக் கிஞ்சித்தும் இளைத்தவர்களல்ல
இந்நூற்றாண்டின் எம் போராளிகள்..
நேத்தாஜி..பகத்சிங்..பிரபாகரன்..வாஞ்சிநாதனென
வரலாறு உண்டு எம்மிடமும்…

இருந்தும் பொலிவியக் காடுகளில்
நீ இரத்தம் பொழிந்து விதைத்த
உருளைக்கிழங்கையும்
கூரையிழந்த பள்ளியையும்
அதே சாயலில் இங்கு
உன் நினைவோடுதான்
கடந்து போகிறேன்….

இந்த மண்ணின்
இனிப்புதான் என்றாலும்
அதனைச் சுவைக்கையில்
கியூபாவில் நீ விளைவித்துச் சென்ற
கரும்பின் சுவை என்றே
அதை உணர்கிறேன்….

பெரு நாட்டின்
தொழுநோய் மருத்துவமனையில்
நீ செய்தது போலொரு
மருத்துவச் சேவைக்கு இணையாய்
இன்னொரு மருத்துவர்
பிறந்திடவில்லை
என்றே நினைக்கிறேன்….

ஒரு தனிமனிதனுக்கு
உலக வரைபடத்தில்
இனம்..மொழி..எல்லை தாண்டிய
உலகலாவிய பார்வை இருந்ததால்
உன்னைப் போராளிகளின் தந்தை
என்றே கொண்டாடுகிறேன்….!

எழுதியவர் : ஆண்டன் பெனி (12-Feb-13, 7:49 pm)
பார்வை : 203

மேலே