வினோதினி...!?

வினோதினியின் மரணத்தை ஒரு செய்தியாய் கடந்து செல்ல முடியவில்லை. எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள் என்று சொன்ன மகளை காப்பாற்ற முடியாத ஒரு தந்தையாய் கதறிக் கொண்டிருக்கிறது மனது.

இந்த சமூகத்தில் மனிதர்கள் பிள்ளைகளை மட்டும் பெறுவதில்லை அரக்க குணம் கொண்ட வக்கிர மிருகங்களையும் பெற்றெடுத்து நம்மிடையே விட்டு விடுகிறார்கள்.

ஆமாம்...
அவள் இறந்து விட்டாள்
பூத்துக் குலுங்கவேண்டிய
செடியொன்று கருகி எரிந்து போய்விட்டது...!
வலி நிறைந்த அவளின்
வார்த்தைகள் இறைத்துச் சென்ற
விடையற்ற கேள்விகள்
யுகங்கள் கடந்த சாபமாய்
இந்த சமூகத்தின் மீது
காறி உமிழப்பட்டிருக்கின்றன...,
என்ன செய்யமுடியும் நம்மால்
நமது ஆற்றாமையை
இப்படி கண்ணீரோடு
எழுத்தாக்குவது தவிர்த்து....

என் கேள்வி எல்லாம்
அமிலத்தை ஊற்றிய அந்த மிருகத்தை
இனி என்ன செய்வார்கள்
என்பதல்ல...
இந்த அமுதத்தை
இழந்த அந்த தந்தை
இனி என்ன செய்வார் என்பதே...?

வலிகள் + கண்ணீரோடு

தேவா

எழுதியவர் : Dheva.S (12-Feb-13, 7:37 pm)
பார்வை : 147

சிறந்த கவிதைகள்

மேலே