காதல் என்ன காதல்

கண்ணுக் கெட்டாக் காதலியே!
கனவுலகில் மட்டும்
கைப்பிடிக்கும் கோலம்
இக் காலம்
வெக்கக்கேடாய் சமுதாயம்!

இருட்டுக்குள் கோட்டை கட்டி
மன இருண்மை காட்டும் வழியில்
உயற்ச்சியே எனக் கருதி
துயர்களைச் சுமப்பர் மனிதர்
நடிப்பான அன்பே
நாகரிகம் எனக் கூத்திடுவர்.

கையேந்து நிலையில் ஆண்கள்
கையேந்தலே கௌரவமாய் கொள்வர்
பணமே குறியெனில்
பண்பென்ன வேண்டும்
அன்பென்ன வேண்டும்?
எக்கச் சக்கம் சீதனம்
எனக் குதிப்பர்;
மகிழ்வர்
நோக்கார் அன்பு!

வேசம் காட்டலில் பெண்கள்
சோரம் போயினும் போவோம்
சாரம் எமக்கு நாகரிய மேன்மையென
கொள்வர்; வெல்வர்!
ஆச்சு, அது சரி!
இது நாகரிக வளர்ச்சி
என நவில்வர்.
போச்செண்டால் பிறகென்ன
விஞ்ஞானம் இருக்கே துணைக்கு
அழிப்பர் கருவை!

இவ்வாறெனில் உலகு
காதல் என்ன காதல்
உண்மை அன்பு வெல்லுமோ
போடி பேச்சி
வெக்கக்கேடாய் சமுதாயம்
இனிக்
கருத்துலகில் காதல் சிறப்பென
பேசுவோம்! போதும்!!

குறிப்பு : இந்த கவிதை 1997 இல் வெளிவந்த எனது `அப்படியே இரு` என்ற கவிதைத் தொகுப்பில் வெளிவந்தது.


  • எழுதியவர் : அழ.பகீரதன்
  • நாள் : 13-Feb-13, 6:13 am
  • சேர்த்தது : அழ.பகீரதன்
  • பார்வை : 170
Close (X)

0 (0)
  

மேலே