என் மகளே...!
என்னுள் உதித்த
பெண்மயிலே..
முடிவில்லா பாவம்
நீ செய்தாயோ
முற்பிறவியிலே..
துளிர்க்காதா ஒரு தளிர்
என்றிங்கு பல நிலங்கள்
அறுவடைக்களத்தில்
ஏன் அரும்பினாய்
அருஞ்சிட்டே....
ஏந்தாதா ஒரு மலரை
என்றிங்கு பல கருவறைகள்
என் மடியில்
ஏன் மலர்ந்தாய்
மாணிக்கமே.....
விளைந்தாலும்
களைந்தெறியக்
கள்ளிப்பாலூற்றும்
கண்ணிமையே...
வளர்ந்தாலும்
வரதட்சணை வக்கிரம்
வாய்க்கரிசியிடும்
வஞ்சிக்கொடியே...
வேறெவரும் வேண்டாமடி
நீர் வார்த்த நானே
வேரறுத்துவிடுகிறேன்....
நானிலத்தில் நானொரு பாவி
நான் சுமந்த உனக்கோ காக்கும் தேவி....!
~~என்றும் அன்புடன் பாத்திமா.
வரதட்சனையை ஒழிப்போம் பெண்ணினத்தை காப்போம்