ஆதலால் காதல் செய்வீர்...

தாயின் அன்பை நினைத்து
தரணியில் நீயும் வாழ்த்து..!
தமிழின் சிறப்பை உணர்ந்து
தமிழில் பேசி பழகு!
நட்பின் தேவை அறிந்து
நட்பை உணர்ந்து போற்று!
உயிர்கள் எங்கும் ஒன்றே..
உணர்ந்து மனிதம் ஆற்று!
காதல் என்பது
அன்புதான்!
இதைக்
கவனத்தில் கொண்டால் நன்மைதான்!
காதல் வேறு..
காமம் வேறு..
பிரித்து உணர்ந்தால்
வாழ்க்கை இனிமைதான்..!
கடவுளின் அன்பும்..
காதல்தான்..
கருணைக்கும் மறுபெயர்
காதல்தான்..
காதலென்னும் சொல்லின்
கருப்பொருள் உணர்ந்து நில்லு..!
காதலெனும் பூத்தூவி
காவியம் பாடி நீ வாழ்த்து!
ஆண் பெண் கூடலில்
இல்லை காதல்..?
அனைத்து உயிர்க்கும்
அன்பை ஓது..
அதுவே காதல்!