இலக்கணம் பகுதி 4 – தமிழில் தெளிவு

தமிழில் ர, ற தடுமாற்றம் தவிர்க்க உதவும் முயற்சியில் ஒரு தொடர்படைப்பு


மதுரை அருகில் ஒரு ஊர் பரவை
வானத்தில் ,மிதக்கும் உயிர் பறவை

வானத்தில் மித எனில் பற
வண்டியை அதிவேகாம செலுத்து எனில் பறத்து

ஒருங்கமை எதிர்பதம் பரத்து
விரி எனிலது பரத்து

குவிந்து எதிர்ப்பதம் பரந்து
காற்றில் மிதந்து எனில் பறந்து

பேணல் என்பது பராமரிப்பு
பேணுவது என்பது பராமரிப்பு செய்வது

மன்னனின் அதிகாரக் கூட்டம் பரிவாரங்கள்

முகத்தில் வருவது பரு
பாலுணர்வு வருவதே பருவம்
பாலுணர்வு வரும் வயது பருவ வயது

கைதிகளுக்கு தற்காலிக வெளிஉலக அனுமதி பரோல்
(ஆங்கிலச்சொல் தமிழில் ஏற்கப்பட்டு வழக்கு சொல்லானது)

பிடுங்கு எனிலது பறி
முரசு எனிலது பறை
சொல் என்பது மலையாளத்தில் பறை

வெகுமக்களிடம் சொல் எனில் பறை சாற்று
மன்னனின் செய்தி மக்களுக்கு சொன்னவர்களே பறையர்கள்
(அரசுக்கு விசுவாசமான ஊழியர்கள், நம்பிக்கையில் உயர்ந்தவர்கள் பறையர்கள்)

காண் என்பது பார்
காணா என்பது பாரா
தாபத்தின் வெளிப்பாடு பாராமுகம்

உலகம் இதன் செந்தமிழ்சொல் பார்

பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு
இதை பாடியவன் முண்டாசு கவி பாரதி

மது அருந்துமிடம் ஆங்கிலத்தில் பார்

முல்லைக்கு தேர் கொடுத்த தமிழ் வள்ளல் பாரி

கல் இதன் வடிவின்அதிகம் பாறை

அதை விடுத்து எனிலது பிற

தனியாக்கு எனிலது பிரி
விலகிச்செல்வது எனில் பிரிந்து செல்வது

அரிசியில் ஆடம்பர உணவு பிரியாணி

நிலவின் தேய்வடிவம் பிறை
சிவனின் புகழ்பெயர் பிறைசூடி

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா –
சுந்தரர் பாடியது சிவனைப் பற்றி

போதை மது பழரசம் ஆங்கிலத்தில் பீர்
அழுந்தி வேகமாக வெளிப்படுவது பீறிட்டு

பாம்பு, கரையான் இருப்பிடம் புற்று
புற்றில் இருப்பதும் ஈசல் – புற்றீசல்
உயிர்செல் கொல்லி நோய் புற்று நோய்

செயல் வெளிப்பாடு செந்தமிழ் சொல் புரி (சாதனை புரி)
மனதில் உள்வாங்கு தற்கால தமிழ்சொல் புரி (புரிதல்)

ஒடிசா மாநில நகரம் ஒன்று புரி (ஜகன்னாத் கோயில் உள்ள ஊர்)
உள் (அகம்) எனில் எதிர்ப்பதம் புறம்

அரசியின் இருப்பிடம் அந்தப்புரம்
(அந்தப்புரத்தில் ஒரு மகாராணி- கண்ணதாசன் வரிகள்)

பின்பக்கம் என்பதும் புறம் (முதுகு என்பது புறம்)
உள்ளங்கையின் பின்பக்கம் புறங்கை

ஒதுக்கு எனிலது புறந்தள்ளு
பொதுவாழ்வில் ஒதுக்கல் புறக்கணிப்பு

வான்வாழி (பறவை) ஒரு வகை புறா

ஜப்பானிய அதிரடி நடிகன் புரூஸ்லி

கண்விழிப் படலநோய் புரை
பிழையான உணவுக்குழாய் உள்வாங்கலால் வருவது புரை

நச்சுஉயிர் ஊர்வதில் ஒன்று பூரான்
கோதுமை மாவால் எண்ணையில் இட்ட வட்ட உணவு பூரி

வடிவில் அதிக எனிலது பெரிய
வடிவில் அதிகமானது பெரியது

கிடைக்க, அடைய எனிலது பெற
கிடைக்கா, அடையா எனிலது பெறா

தென் அமெரிக்க குடியரசு நாடு ஒன்று பெரு

உணர்வில் திருப்தியின் உச்சக்கட்டம் பெருமை
கௌரவ உணர்வு பெருமை

அதிகம் எனிலது பெரும்
வாங்கும், அடையும், கொள்ளும் எனிலது பெறும்

வாங்கு, அடை, கொள் எனிலது பெறு
வாங்கி, அடைந்து, கொண்டு எனிலது பெற்று

அதிக பாக்கியம் என்பது பெரும் பாக்கியம்
அடையும் பாக்கியம் என்பது பெறும் பாக்கியம்.

அடையும் அதிக பாக்கியம் எனில் பெறும் பெரும் பாக்கியம்
அடைந்த அதிக பாக்கியம் என்பது பெற்ற பெரும் பாக்கியம்

குழந்தையை ப்ரசவிப்பது குழந்தை பெறுவது

நபர்கள் எனிலது பேர்
நபரை எனிலது பேரை

விளிக்கும் சுட்டும் அடையாளம் பெயர்
விளிக்கும் சுட்டும் அடையாளத்தை எனிலது பெயரை

மாற்று எனிலும் பெயர்
மாற்றி எனிலது பெயர்த்து

விலக்கி தூக்கி என்றாலும் பெயர்த்து
மலையை விலக்கி தூக்கி எனிலது மலையை பெயர்த்து

மொழிமாற்று எனிலது மொழி பெயர்
மொழிமாற்றி எனிலது மொழி பெயர்த்து
மொழிமாற்றம் எனிலது மொழி பெயர்ப்பு

தலைமுறையின் இடைவிட்ட ஆண் வாரிசு பேரன் (பெயரன்)

மன்னர்கால ஓங்கார வெற்றி முரசு பேரிகை

கர்ப்ப காலம் என்பது பேறு காலம்

வெள்ளை நிற பஞ்சு தானியம் பொரி

எண்ணையில் போட்டு எடு என்றால் பொரி
எண்ணையில் மூழ்க்கி செய்யும் சமையல் பொரியல்

இயந்திரம் எனிலது பொறி
கணினியின் இன்னொரு பெயர் கணிப்பொறி
விலங்கு பிடிக்கும் கூடும் பொறி

இயந்திரம் தொடர்பான படிப்பு பொறியியல்
இயந்திரப் படிப்பு கொண்டவர் பொறியாளர்

அர்த்தம் அதன் சொல் பொருள்

சகிப்பு என்பது பொறுமை

மனதின் தீய உணர்வு சகிப்பில்லாத்தனம் பொறாமை

இணைசேர் எனிலது பொருத்து
சகித்து எனில் பொறுத்து

ஒப்பீட்டில் சார்நிலை நிகழ்வு எனில் பொருத்தது
சகித்தது எனிலது பொறுத்தது

களத்தில் சண்டை எனில் போர்
களத்தில் சண்டையிடுபவர் போராளி

சண்டையில் எனிலது போரில்

சண்டையை எனிலது போரை

போதாது இதன் வழக்கு சொல் போறாது
போதும் இதன் வழக்கு சொல் போறும்

புகழ் இதன் வினைச்சொல் போற்று
புகழ்ந்து எனிலது போற்றி



இன்னும் வரலாம்......................

எழுதியவர் : மங்காத்தா (15-Feb-13, 12:31 am)
பார்வை : 248

மேலே