பட்டாசாய் சிதறும் பள்ளி செல்லா குழந்தைகள்

உணவே மருந்து

மருந்தால்தான்
உணவு
இவனுக்கு

வயிறு வளர்க்க
அல்ல
வயிறு இருக்க
இவனது உழைப்பு

அறு சுவை உணவு
வேண்டாம்
என்று அடம்பிடிக்கும்
குழந்தைகளுக்கு நடுவில்
ஆண்டவனின் அத்துமீறல்தான்
இவன்

விரல்கள் சுட்டபோதும்
விடுமுறை இவனுகில்லை

பட்டாசாய் சிதறிய இவனை
பார்பதற்க்கு எவரும் இல்லை

வீதியில இவன் கிடக்க
விதிமுறைகள்
விளகிடுச்சு
வீசிய கரன்சியினாலே

எழுதியவர் : திருக்குமரன்.வே (15-Feb-13, 2:22 pm)
பார்வை : 131

மேலே