மனதே...!

பிறப்பு அழகான பொய்
இறப்பு வலிமிக்க உண்மை
இவ்விரண்டிற்கும் நடுவில் வெற்றிகரமாக வாழ்பவனே
சாதனையாளர் ஆகிறான்
காலத்தின் அவசியத்தை உணராதவன்
வாழ்க்கை என்ற ஓட்டபந்தயத்திலிருந்து தடுக்கி விழுகிறான்
ஒழுக்கம் மிகுந்தவன்
முழுக்க முழுக்க சிறந்தவன் ஆகிறான்
பண்பும் அன்பும் உடையவன்
மற்றவர்களின் மனதில் இடம் பிடிக்கின்றான்
கல்வியை கற்றவன்
வாழ்க்கையில் தெளிவு அடைகிறான்
செல்வத்தை உடையவன்
வாழ்க்கையில் செழிப்பு அடைகிறான்
இதையெல்லாம் மனதில் கொண்டு
வாழ்க்கையில் முன்னேறுவாயாக!

எழுதியவர் : ஹரிகரன் (20-Feb-13, 7:13 pm)
பார்வை : 176

மேலே