இது இரண்டாவது பூனை !?!

சர்தாஜி ஒருவர் ஒரு தவறு செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.

அதே அறையில் ஒரு திருடனும் அடைக்கப்பட்டிருந்தான்.திருடன் சிறையிலிருந்து தப்பிக்க திட்டம் போட்டான்.இதை அறிந்த சர்தாஜி தன்னையும் சேர்த்துக் கொள்ள சொன்னார்.சிறிது தயக்கத்துடன் அவன் ஒத்துக் கொண்டான்.

நள்ளிரவில் திருடன் மெதுவாக சிறையின் பின்புறம் இருளான ஒரு பகுதிக்கு சென்று ஒரு பெரிய கயிறை சுவரின் மீது போட்டு அதன் மீது ஏறலானான். சர்தாஜியும் பின் தொடர்ந்தார்.

அப்போது அந்தப் பக்கம் வந்த வார்டன் ஏதோ சப்தம் கேட்கிறதே என்று உஷாராகி,

"யாரது அங்கே?"என்று சப்தம் கொடுத்தார்.

திருடன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு,

"மியாவ்"என்று கத்தியவாறு சுவற்றிலிருந்து வெளியே குதித்து விட்டான்.

வார்டனும் பூனை தான் திறிகிறது என்று எண்ணி திரும்ப நடந்தார்.இப்போது சர்தாஜி கயிற்றின் மீது ஏறவே மீண்டும் சப்தம் கேட்கிறதே என்று உணர்ந்து வார்டன் திரும்ப வந்து,

"என்ன சப்தம்? யாரது?"என்று கத்தினார்.

சர்தாஜி புத்திசாலித்தனமாக குரல் கொடுத்தார்,

"இது இரண்டாவது பூனை!"

எழுதியவர் : எனக்கு பிடித்தது (21-Feb-13, 3:51 pm)
சேர்த்தது : DineshRak
பார்வை : 353

மேலே