தெளிந்த நீரோடை

அறிஞரும் அவர்தம் அறிவும்
ஒரு தெளிந்த நீரோடையைப் போல!

நம் மனதும், எண்ணங்களும்
காலியான வாளியைப் போல!

விருப்பமும், ஆர்வமும் இருந்தால்
வேண்டுமளவு எடுத்துக் கொள்ளலாம்!

அறிஞர்தம் அறிவு
அள்ள அள்ளக் குறையாது!

’அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்’. குறட்பா 443

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Feb-13, 6:41 pm)
பார்வை : 367

மேலே