மன்மதக் காற்றே3 B2

எங்கிருந்து வருகின்றாய்?
யாரைத் தேடி விரைகின்றாய்?
செல்லும் வழியில் சிறு குறும்பாய்
சீண்டி எனை விடை கொண்டாய்

பகலோன் பவனி நேரத்தில்
பாரா முகமாய் விலகுகிறாய்
நிலவை சூழ்ந்த முகிலாகி
நித்திரையிலும் விழிக்கின்றாய்

தழுவிச் செல்வது உன் தந்திரமோ
இத்தாரகையை மயக்கிடும் மந்திரமோ?
விழித்திரையில் வீழாது
சதிராட வைப்பது உன் குணமோ?

மதகம் யாவும் கைத்துறந்து
மதனன் போல் உருகொண்டு
மதுகமாய் வந்து மதுவுண்டு
மாதுகையில் மையல் கொண்டிடு....

மதகம்-கோபம்
மதுகம்-வண்டு
மாதுகை-பெண்மை

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை. அமுதா (22-Feb-13, 10:48 am)
பார்வை : 160

மேலே