வளரும் அன்பு...

எத்தனையோ பேர்
சொல்லிவிட்டு போகட்டும்
நமக்குள் இருக்கும்
நம்மைப் பற்றிய அன்பை காதலென...

சந்தித்த நாளிலிருந்து
சிந்தித்து கொண்டுதான் இருக்கிறேன்
அன்பைப் பற்றி அல்ல
அன்பின் வடிவான உன்னைப்பற்றி

பிரிக்கப்படாமலும் சேர்க்கப்படாமலும்
நாமும் நம் அன்பும்....
பிரிந்தே இருந்தாலும்
புரிந்தே தொடர்கின்றோம்
நமக்கான நம் வாழ்வை...

எழுதியவர் : anithbala (22-Feb-13, 4:35 pm)
Tanglish : valarum anbu
பார்வை : 221

மேலே