அப்பா
உயிரோடு சுமந்து கருவாய் தாங்கி
உரு கொடுத்த என் அன்னையை
உன் உயிராய் நேசித்தாய்-அன்றே
உன்னால் கற்றேன் காதலின் இலக்கணத்தை ..
என் பிஞ்சு பாதங்கள் தொட்டு
என் நெற்றியில் ஆசை முத்தமிட்ட போது
நீ அடைந்த இன்பம் தான் எத்தனை..
நீ அன்றே உணர வைத்தாய் அன்பினை..
மனதில் உன் முகம் பதியாத வயதில்
என்னை கையில் ஏந்தி "கண்ணே" என்றழைக்கும்
உன் குரல்-இன்றும் ஒலிக்கிறது காதில்..
நீ வெகு தொலைவில் இருந்தாலும்..
தட்டு தடுமாறி நடை பயின்ற போது
கையினை பற்றி பாதுகாத்தாய்.
குதிரை சவாரி செய்ய வைத்தாய்...
பள்ளி சென்று பாடம் பயின்ற போது
விரல்களை பிடித்து எழுதவைத்தாய்.
பள்ளி பாடம் மட்டுமா??
இல்லை-வாழ்கை பாடத்தையும் கற்று கொடுத்தாய்.
பாலுட்டி வளர்த்தால் அன்னை
நீ பாசம் ஊட்டி வளர்த்தாய்
தாலாட்டி வளர்த்தால் அன்னை.
நீ தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தாய்..
உன் வீரம் வர்ணிக்க என்னிடம்
வார்த்தைகள் இல்லை..
இறைவா வரம் கொடு
என் தந்தை என் மகனாக பிறக்க.
வேதனை யாதென தெரியாத
துன்பம் துளி அறியாத என்னை
விட்டு நீ போனது ஏன்.??
வலியில் வாழ்கிறேன்
மகனே என்றழைக்க நீ இல்லாததால்
என் தந்தைக்கு சமர்ப்பணம்..