வீட்டிற்குள் காடு...
மா
பலா
வேம்பு
தேக்கு
மூங்கில்
சந்தனம்
என
காடுகளில் உள்ள
மரங்கள்
கதவாய்
கட்டிலாய்
ஜன்னலாய்
ஊஞ்சலாய்
விட்டமாய்
தொட்டிலாய்
மேசையாய்
நாற்காலியாய்
இன்னும் பலப்பலவாய்
மரங்கள் எல்லாம்
வீட்டிற்குள்..............
மழை இல்லாமல்
மாண்டு போன
மனிதர்கள்
காட்டிற்குள்.........