கடவுளின் எச்சரிக்கை
ஏய் ! மனிதா !
நான் படைத்த
உலகில் உன்னை எல்லா
உயிருக்கும் தலைவனாய்
வைத்தேன் !!!
ஆனால் நீயோ
கொடுத்த நிலத்தில்
உரம் கொண்டு கெடுத்து
நின்றாய் !!!!!
கொடுத்த நீரில்
கழிவு கொண்டு
கெடுத்து நின்றாய் !!!
கொடுத்தக் காற்றில்
நச்சுப் புகை கலந்து
கெடுத்து நின்றாய் !!!!!!
இயற்கையின் மரங்களை
வரமாய்த் தந்தேன் .
அதையும் அழித்து
நின்றாய் !!!!!!!!!!
உன் விவேகத்தால்
வான் வெளியையும்
விட்டு வைக்கவில்லை .
அது மட்டுமா ????
விலங்குகளை அடித்து தின்றாய் .
பறவைகளை வறுத்துத்
தின்றாய் !!!!!
ஏய் !சதைப்பிண்டமே!!
உன் ஆட்டத்தை நிறுத்திக் கொள்;
இல்லையெனில்
நான் என் ஆட்டத்தை
தொடங்கி விடுவேன் !!!!!!!!!