ஒரு கவிஞருக்கான மரபு சொற்கள் அறிவோம்..வாரீர்.. --2

தோழர்களே ஒரு கவிஞருக்கான மரபு சொற்கள் அறிவோம்..வாரீர்.. எனும் பகுதியின் இரண்டாம் நிலை இங்கு அளித்துள்ளேன்...வாசித்து , பயன்படுத்தி மகிழ்க..

கேளல் கேளிர் ­= பகையும் நட்புமில்லாத அயலார்

கைம்மிகுதல் ­ =அளவுகடத்தல்

கையடித்தல் ­ =உறுதி தருதல்

கைப்பாடுதல் ­ =அரும்பாடுபடுதல்

கையைக்கடித்தல் ­= பொருள் நஷ்டமாதல்

கையோடு கையாய் =­ காரியத்தோடு காரியமாய்,

கொஞ்ச நஞ்சம் ­ =சிறிதளவு

கொடி விடுதல் ­= மிகுதியாதல்

கொழு கொம்பு பு ­ = பற்றுக்கோடு

கோலாகலம் ­ =கூக்குரல், ஆடம்பரம்

சடைவாறுதல் ­= இளைப்பாறுதல்

சாலமாலம் ­ =வஞ்சகம்

சித்திரைச் சுழியன் ­ =குறும்பன்

சேர் கொடுத்தல் ­ =காட்டிக் கொடுத்தல்

சொட்டைச் சொல் ­= பழிச்சொல்

தக்கடி வித்தை ­= ஏமாற்று

தடங்கோலுதல் ­= வழிசெய்தல்

தட்டுண்டு போதல் ­ =தடைப்படுதல்

தட்டுமாறி ­= ஏமாற்றுபவன்

தட்டுமானம் ­ =தந்திரவழி

தாட்டுப் பண்ணுதல் ­ =காலம் கடத்துதல், மறுத்தல்

தந்திதந்தியாய் ­= வரிசைவரிசையாய்

தலைப்பாமாறி ­ =பெரும் மோசக்காரன்

தலையெடுத்தல் ­ =மேல்நிலைக்கு வருதல்

தான்தோன்றி ­= செருக்குடையவன்

சிசைப்புரட்டன் ­= பெரும் பொய்யன்

திமிலகுமிலம் ­= மகிழ்ச்சி மிகுதி

திறுதிறுத்தல் ­ =அஞ்சி விழித்தல்

தீரக்கழிய ­ =மிக அதிகமாய்

துப்பு கெட்டவன்= ­ அறிவற்றவன், அறிவு கெட்டவன்
துறைபோதல் ­ =நிரம்புதல், கற்றுத் தீர்தல்

தெம்மாடி ­ =அறிவீனன், ஒன்றுக்கும் உதவாதவன்

தொடுபிடியாக = ­ இடைவிடாமல்

நட்டாமுட்டி ­= வஞ்சகம்

நழுநழுத்தல் =­ பிடிகொடாது பேசுதல்

நீக்குபோக்கு ­= இணக்கமாயிருத்தல், மரியாதை

நெளிவு சுளிவு ­ =ஏற்றத்தாழ்வு

நேர்ந்து போதல் ­= சம்பவித்தல்

பக்கஞ்செய்தல் ­= ஒளிவிடுதல்

பக்கடுத்தல் ­ =நொறுங்குதல்

படிப்படியாய் ­= சிறுகச்சிறுக

பணி கொள்ளுதல் ­ =ஏற்றுக் கொள்ளுதல்

பண்விடுதல் ­ =நிலைகுலைதல்

பாக்கி சாக்கி ­ =மிச்சம் மீதி

பாடுபறப்பு ­= கவலை

பாரதூரம் ­ =பெருந்தூரம், முதன்மை

புரிதிரித்தல் ­ =கெடுக்க வழிதேடுதல்

புரிமுறுக்குதல் ­= கோள் சொல்லுதல்


புப்புத் தட்டுதல் ­ =பற்று விட்டுப் போதல்

பூட்டழித்தல் =­ கட்டுக்குலைத்தல்

பையப்பைய ­ =மெல்ல மெல்ல

பொட்டுப்பாடி ­= சிறுபண்டம்

போக்கிரி சாக்கிரி ­ =கதியற்றவன்

வகைதொகை ­ =விவரம்

வம்பு தும்பி ­=== வீண் பழிச்சொல்

வரையறை ­ எல்லை, அளவு

வாரம் பாடுதல் =­ பின்பாட்டுப் பாடுதல்

வீற்றுவீற்றாக ­= வெவ்வேறாக

நன்றி; தினமணி
..

எழுதியவர் : அகன் (26-Feb-13, 9:19 pm)
சேர்த்தது : agan
பார்வை : 1019

மேலே