இறைவனருள் கிட்டட்டும்
"அவரை விதை ஒன்றை
அழுத்துகிறோம் மண்ணிற்குள்
தவறின்றிச் சரியாகத்
தரமான உரம் வைப்போம் .
குவளை யினால் தண்ணீரைக்
குறிப்பாக ஊற்றிடுவோம் .
இவை அனைத்தும் செய்தபின்
இருந்திடுவோம் முளை காண ."
"ஊற்றிய நீர், உரம் ,மண்ணில்
ஊட்டமெலாம் பெற்ற விதை
நாற்றாய் வெளிப் படுங்கால்
நல அவரை நாற்றாகும்.
சாற்றுகிறேன் அற்ப்புதத்தை
சற்றும் பிறர்ச்சி இன்றி
ஏற்றதோர் அவரை இனம்
எப்படியோ தோன்றிடுதே !"
சமயங்கள் சார்ந்தோரும்
சாதி விடா அவரையை போல்
அமையப் பிற மதங்கள்
அறிவிக்கும் கொள்கை எலாம்
தமதாக்கிக் கொண்டாலும்
தன் சமயத் தன்மையுடன்
இமய வளர்ச்சிப் பெற
இறைவனருள் கிட்டட்டும் !"