வல்லரசு கனவில் இந்திய பட்ஜெட் - 2013 ...?

வல்லரசு கனவில் இந்திய பட்ஜெட் - 2013 ...?

நாட்டின் வளர்ச்சியை மையமாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது எனவும், முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாகவும், பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மிகவும் வரவேற்கத் தக்க பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அளித்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரம் எதிர்கொண்டுள்ள சவால்களை சமாளிக்கும் விதமாகவும் பட்ஜெட் அமைந்துள்ளது என்றார்.

எதிர்க்கட்சிகள் என்ன கூறுகின்றன இந்த பட்ஜெட் குறித்து...? நாளை முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

காங்கிரஸ் கூட்டணி கட்சியில் இருந்து கொண்டு இருக்கும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் இவ்வாறு கூறினார். இந்த பட்ஜெட் விவசாயிகள் மற்றும் ஏழைகளுக்கு எதிரானது, நாங்கள் இந்த பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் எதிர்ப்போம் என்றார்.

தேசிய ஊராக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு சுமார் 60,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுதான் நூறு நாள் வேலை திட்டம்...இந்த திட்டமே வேஸ்ட் என்று கூறுபவர்கள் மேலோட்டமானவர்கள்...இந்த அறுபதாயிரம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்க அல்லது வழங்குவதற்கு ' சின்னப்பிள்ளை ' ஒரு காரணம்...பிறிதொரு சமயங்களில் இது குறித்து எழுதுவோம்.

ராணுவத்திற்கு கூடுதலாக சுமார் 43,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது ஆக, ராணுவத்திற்கு மட்டும் சுமார் இரண்டு லட்சம் கோடி பிளஸ் ஒரு மூவாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

மற்றபடி மக்களுக்கு நேரடியாக செல்லும் மானியங்கள் பெருமளவில் வெட்டப்பட்டு விட்டன.

விவாசய உற்பத்தி பொருளுக்கு சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த விவசாய உற்பத்தி பொருளும் ராணுவத்துக்கு ஒதுக்கும் நிதிகள் மட்டுமே வெளிநாட்டு கம்பனிகளுக்கு சென்று விடும்...எவ்வாறு 3500 கோடிக்கு சாப்பர் வாங்கினார்களோ அதுபோன்றே..!

மொத்த செலவு 16.65 லட்சம் கோடி...இவையெல்லாம் விரிவாக நாளை அறிந்து கொள்ளலாம்.

இந்த ராணுவத்திற்கு ஒதுக்கிய நிதியில் இருந்து தான் அமேரிக்கா மற்றும் பிரிட்டன் மற்றும் சீனா, பிரான்ஸ், ஜப்பான் ஆகியவை யுத்த தளவாடங்கள் விமானம் கப்பல் சாப்பர் ஏனைய போர்க்கருவிகள் வாங்கப்படும்...இதில் தான் கோடி கோடியாய் ஊழல் செய்வார்கள் இந்திய ராணுவத்தினரும் ( உயர் அதிகாரிகள்..) அரசியல்வாதிகளும் என்று அறியலாம்.

வரும் ஆண்டுகளில் சீனாவும் இந்தோனேசியாவும் மட்டுமே வளர்ச்சியை நோக்கியதாக இருக்கும் என்று கருத்து சொல்லியிருக்கிறது நிதித்துறை.

இந்த நிதி ஆதாரங்களில் ஒளிந்திருக்கிறது இலங்கை விவகாரம் என்றால் உங்களால் நம்ப முடியுமா..?

2025 - ஆம் ஆண்டு உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடாக உருவாகிவிடும் என்று வல்லரசு பல்லவியையும் சேர்த்தே சொல்லியுள்ளார்கள்...நமக்கு என்ன தெரிகிறது என்றால் வரும் 2025 - வரை காங்கிரஸ் என்ற கட்சி இருக்கும்..?
மேற்குறிப்பிட்ட ஆண்டிற்குள் வல்லரசு ஆக வேண்டுமாம்...ஏன் நல்லரசாக இருக்கக்கூடாதா...? நல்லரசு எதற்கு..? யாருக்கு..? மக்களுக்காக இருப்பதால்..வல்லரசு வேண்டும் என்று கூறுகிறார்கள்...அப்பத்தானே நாட்டையே கொள்ளை அடிக்க முடியும் என்பதால் இருக்குமோ...? வல்லரசு கனவு...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (28-Feb-13, 4:52 pm)
பார்வை : 209

மேலே