விலையும் காதல்
மயங்கிய மாலையில்
மறைந்த கதிரவன் உறங்கிவிட
உள்ளத்துப் புன்னகையுடன்
பூத்து நின்ற மூன்றாம்பிறை.
மனம் உறங்கி, மயங்கிய
உடலுறங்கி, கலைந்த இடை
மறுபடியும் உயிர்கொள்ள,
பூவையவள் முகம் பூத்தாள்.
மலர்ந்து குழுங்கும் மலருக்கும்,
மடிந்து வீழ்ந்த கானகக்கனிக்கும்,
மனம் வீசும் காதலுக்கும்
விளையாட விலைவைக்கும் கலை.
கன்னடத்துப் பைங்கிளிகளும்,
சுந்தரத் தெலுங்கின் சுந்தரிகளும்,
மலையாள மங்கையரும், மயங்கும்
மொழிபேசும் கண்ணாள், தமிழச்சி.
காதல் பேசிநிற்கும் விழியும், உருவும்
கைகளுக்குள் அடங்கிட மறுக்கும்.
உறவி உருமல் கலந்து
உரசும் படுக்கைக் உணர்த்தும்.
வார்த்தை மொழி இங்கில்லை,
உயிருருக்கும் காதல்மொழியுண்டு.
கட்டுண்டால் காண்கையில்
சுற்றிப்பிணைந்த நாகம்தனே.
முழுயிரவும் விளையாடி,
முனுமுனுப்பில் கவிபாடி,
சிலையேறிய மலர்ந்த வெள்ளி
மயங்கி மஞ்சளாய் வீழ,
மலையேறி கார்மேகமும் ஏறி
கார்கூந்தல் மேலே இட்டபூவாய்,
வானேறி வெள்ளிமுளைத்த காலை,
காட்டிய பாதையில் மறைந்தாள்.
பேரின்பமாய் சிற்றின்பம் விதைத்து.