"நான் இதை நம்பமாட்டேன்!"

"நான் இதை நம்பமாட்டேன்!" என்ற வாசகங்களை
அன்றாட வாழ்வில் அடிக்கடி கேட்க நேர்கின்றது.
அதைப் பற்றிய ஒரு சிந்தனை இதோ கீழே.



நம்புதல் என்பது நன்றாக அறிதலாகும்!

நம்புதல் நன்றாகப் புரிந்தாலே ஏற்படும்!

புரியாத ஒன்றை நம்ப மறுப்பார் நம்மவர்!

தெரியாத ஒன்றையும் நம்ப மாட்டார் நானிலத்தில்!

நன்மையோ, தீமையோ,

எல்லாவற்றிலும் உடன் இருப்பதையே,

நம்பகமாய்க் கொள்வர்!!!

"உண்மைக்கு உடன் இருக்க

ஒருபோதும் கருதார்".!!!!

ஓராயிரம் பொய்யிக்கும் உடன் இருந்தால்,

ஓரளவு நம்புவர்.

நம்புதல் என்பது தன்னை நம்புதல்!

தன்னில்லுரையும் உண்மையை நம்புதல்.

உயர்விலும் தாழ்விலும்

உண்மையாய் இருத்தலாம்!

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி (28-Feb-13, 4:55 pm)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 141

மேலே