சொந்த தேசம்
நான்கு சுவர்
நன்கறியா பன் முகங்கள்
எனக்குள் ஊறும் உணர்வுகள்
வெளிவராது தவிக்கும் வார்த்தைகள்
சோகம் தீர்க்க
தம்பியின் மின்னஞ்சல்
சொந்தக்கதை சொல்ல
'ஸ்கைப்'இல் தாய் முகம்
இதயம் அடைக்கும் ஏமாற்றங்கள்
உயிர் விட துடிக்கும் ஏக்கங்கள்
ஆறுதல் சொல்லும் கண்ணிருடன்
கலந்து போன என் வாழ்க்கை
வேண்டாம் இந்த வாழ்கை
போதும் சொந்த தேசம் ....