ஒரு பேச்சாளனின் கவலை.

முன் வரிசையில் அமர்ந்திருப்பர்,
முனு முனுத்துக் கொண்டிருப்பர்,
பேச்சாளரை அவ்வப்போது பார்ப்பர்,
பேசுவதெல்லாம் அங்குதான் பேசுவர்.

"இவனென்ன தொன தொனக்கிறான்
எப்போதுதான் பேசி முடிப்பான்?
இவன் உளறுவதைக் கேட்கவா வந்தோம்.
எவளெவள் என்னென்ன சேலையோ!
எம்புட்டெம்பட்டு நகைகளோ!
அதைத்தானே பார்க்கவந்தோம்.
அவளைப்பாரு இவளைப் பாரென்றே"
அயராமல் பேசிக் கொண்டே இருப்பர்.

பாவம் அந்தப் பேச்சாளிதான்......
இவர்களை சமாளிப்பதே பெரும்பாடு.
இவர்களுக்கு அவர் பயந்துதான்
பார்த்துப் பார்த்துப் பேசவேண்டும்.

உண்மையைப் பேசினாலும் நம்ப மாட்டர்
பொய்களை ஜோடித்தாலும் கோவிப்பர்
வந்தாலும் கூட்டமாகவே வருவர்.
போனாலும் மொத்தமாகவே போவர்.
பெண்களை நினைத்தாலே பேச்சாளர்
பெருங் கவலை கொள்கிறார்.

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா. (1-Mar-13, 9:36 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 107

மேலே