தகர வரிசை ...
தடைகளை தகர்த்தெறிய
தாவுகிறது மனது ...
திணைகளை தெரிந்து கொள்ள
தீப்பிடிக்கும் வயது ...
துணை தேடும் நெஞ்சங்களின்
தூங்காத விழிகளும்
தென்றலை தூது விட்டு
தேடிய காலங்களில்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்று
தொட்டு துலங்கசெய்ய
தோன்றாத எண்ணங்களை
விட்டு விட்டு தொலையாத
வாழ்க்கையை தொலைக்காமல்
வாழக்கற்றுவிடு மனிதா !!!