குயவனின் கூடு
நரம்புகள் புடைக்கச்
செய்கிறான் வேலை......
நைந்து போக காத்திருக்கும் அவன் வீடு
ஓடு பிரிக்க காசில்லாமல்
ஓட்டுகிறான் வாழ்வை....
தூய சோற்றின் மீதத்தை
பிசைந்து தின்கையில்
நடுங்கும் விரல்களில்
ஒட்டிய சேரும் சோறும்
விதியாசபடுவதில்லை....
இன்றும் தெரிகின்றது
இது போல் பல நிகழ்வுகளை தாண்டி
நாம் தேடும் வாழ்வின் பயணம்...
மிச்சமின்றி மீதமின்றி
வேய்ந்து விட்ட குடிசையின்
நாலா புறமும் தெரியாமல்
ஒளிந்து கொள்கிறது வெயிலிடமும்
மழையிடமும்....
அந்த கூட்டின் மீதொரு
குயில் கூவத் துடிக்கையில்
அழுகிறது அவன் ஆன்மா.......