மரணத்தின் எச்சம்....
நிகழ்வதை உணர்த்தாத
பாவங்கள் அவளுடையது..
மலர்ந்துதான் இருக்கும்
முகம்...
ஐவிரல்கள் பதிந்த போதும்.
தட்சணைக்காக தாய்வீடு
துரத்தப்பட்ட போதும்
கலங்கியதில்லை கண்கள்...
பச்சை உடம்புக்காரியை
கருவறுத்த போதும்
எதிர்க்காத பூஞ்சை தான்....
தூக்கிலிட்டு மரணத்தை
ஏன் தழுவினாள் தாய் என்று
புரியத்தானில்லை
பாலுக்கழுத தங்கச்சி பாப்பாவை
தேற்றியபடி நின்ற
மூத்த மகளுக்கு .......