வெற்றிகளின் சொந்தக்காரி
என் வாழ்க்கையின்
பக்கங்கள் ....
போராட்டத்தை மட்டுமே
சந்தித்திருக்கின்றன !
ஏனென்றால்
தோல்வியைச்
சந்திக்கவும் தயாரில்லை ;
தாங்கவும்
சக்தி இல்லை .
ஆகையால் ,
வெற்றி அடைய
கனவிலும் போராடினேன் ;
நினைவிலும் போராடுகிறேன் ;
எதிர்காலத்திலும் போராடுவேன் !