சாதிப்பாய் நீ இப்புத்தாண்டில்

இளைய சூரியனே
எழு !!!
உனது சுட்டெரிக்கும்
வெயில் எனக்குப்
பிடித்திருக்கிறது .

ஏனெனில் .....
இந்தப் புத்தாண்டில்
என் இலட்சியப்
பாதைக்கு தடையாய்
வரும் அனைவரையும்
சுட்டெரிக்க .....
இளைய சூரியனே !
நீ .......எனக்கு வேண்டும் .

வெண்குடை நிலவே 1
குளிர்ச்சி தரும் உன்னையும்
எனக்குப் பிடித்திருக்கிறது .
ஏனெனில் ....
இந்தப் புத்தாண்டில் என் இலட்சிய
பாதைக்கு உறுதுணையாய் இருப்பவர்கள் மீது
குளிர்ச்சியைப் பொழிய நிலவே .....நீ
எனக்கு வேண்டும் .

இடியும் மின்னலும் கலந்த புயலே !
உன்னையும் எனக்குப் பிடித்திருக்கிறது .
ஏனெனில் ......
இந்தப் புத்தாண்டில் என் இலட்சியத்தை
நான் அடைய போராடவேண்டும் என்று
என்னை அறிவுறுத்தப் புயலே !நீ .
எனக்கு வேண்டும் .

மென்மையாக வீசும் தென்றலே !
உன்னையும் எனக்குப் பிடித்திருக்கிறது .
ஏனெனில் .....
இந்தப் புத்தாண்டில் என் இலட்சிய
பாதைக்கு ஊக்கம்
கொடுப்பவளே நீ ...தானே !
எனவே ......தென்றலே ....நீயும்
எனக்கு வேண்டும் .

இளைஞனே !
போராடு !போராடு 1
உனது இலட்சியத்தை
அடையும் வரை மனந்தளராது
போராடு !உன் வாழ்வில்
நீ ...சாதிப்பாய் !
சாதிக்கப் பிறந்தவன் நீ !
சாதனையாளர் பலர் உன்னை எல்லாப்
புத்தாண்டிலும் வழிநடத்திச் செல்வர் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (1-Mar-13, 11:15 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 98

மேலே