இங்கே வரவேண்டாம்

அம்மா ....
நீ இங்கே வரவேண்டாம்
உனக்கு இது பிடிக்காது
ஒத்து வராது ...

நிம்மதியில்லை .....
இயந்திரத்தனமான வாழ்க்கையம்மா
தெரிந்தவர்களை கண்டால் கூட
சின்னச் சிரிப்புத்தான்
வெளிவருகிறது ....
சிலவேளை அதுகூட இல்லை
நீ இங்கே வரவேண்டாம்

வெளிநாடு ...வெளிநாடு ...என்று
நீதானே அனுப்பி வைத்தாய் ...
சத்தியமாய் சொல்கிறேன் அம்மா
இங்கே நிம்மதியாய்
உறங்க கூட முடியவில்லை ....

முற்றத்து மாமரம் இல்லை ...
உன் மடியில்லை ...
உறவுகளில்லை ....
உழைப்பு மட்டும்தான்
நீ வரவேண்டாம்

நிம்மதியாய் சாப்பிடக்கூட
நேரமில்லை ....
அதிகமாய் ஆசைப்பட்டோமா
என்று கூட தோன்றுகிறது
நம் ஊரில்
என்ன இல்லையம்மா ...
ஏன் இங்கே வந்தேன் ....

நடந்தது நடந்துவிட்டது
ஆனாலும் .....
நீ இங்கே வரவேண்டாம்

எழுதியவர் : கலைப்பிரியன் (அனுஜன் ) (1-Mar-13, 10:55 pm)
பார்வை : 77

மேலே