தொடர்புடைய காதல்

தொடர்பில்லாத தொடர்புகளை தொடர்புபடுத்துவது தான்
காதல்

$அன்பை தேடி அலைந்தேன் அடிதான் விழுந்தது
$தேடினால் கிடைப்பதற்கு அது காகிதம் அல்ல
$காகிதத்திற்கும் பேனாமையிற்கும் உள்ள உறவு என்று
$அது என்ன உறவு என்று சொல்ல
$காகிதத்திற்கும் தெரியவில்லை
$பேனாமையிற்கும் தெரியவில்லை
$உணரதான் முடியுமாம்
$இறுதிவரை அறியாதவள் ஆனேன்


$ஏதோ ஒரு மரத்தினால் ஆன காகிதமும்
$ஏதோ ஒரு ரசாயனத்தால் ஆன பேனாமையும்
$தொடர்புகொண்டது ஆம் காதல் என்னும் தொடர்புகொண்டது


$எங்கோ ஒரு நிலத்தினில் மேல் பனித்துளியானது
$எங்கோ ஒரு வானதினில் மேல் சூரியனானது
$தொடர்புகொண்டது ஆம் காதல் என்னும் தொடர்புகொண்டது


$ஏதோ ஒரு காரணத்தால் வந்த இன்பமும்
$ஏதோ ஒரு செயலால் வந்த துன்பமும்
$தொடர்புகொண்டது ஆம் காதல் என்னும் தொடர்புகொண்டது


$இவைகள் என்ன தொடர்புகொண்டது?
$தொடர்புகொண்டது! ஆம் ,காதல் என்னும் தொடர்புகொண்டது !!!

எழுதியவர் : saranya (3-Mar-13, 12:34 pm)
பார்வை : 119

மேலே