நான் இல்லை என்றாலும் என் சொல்லிருக்கும்.
விவசாயியின் வியர்வையில் – இந்த
தேசத்தின் குருதிப் பாய்கிறது!
விவசாயி எழுந்தப் பின்தான்
சூரியனே விழிக்கிறது!!
விவசாயி உழைப்பின் இரத்தச் சொட்டுகள் தான்
வானம் மாரியாக பொழிகிறது.
யார் அறிவார் இதை....
நெஞ்சமில்லாத கள்வர்கள் பலர்
தூக்கி மிதிக்கிறார்கள் ஏழை என்று
ஏரின் கீறல்தான் ஆறு – அவர்
மண்வெட்டியால் ஓங்கி வெட்டிய குழிதான் ஏரி
யார் அறிவார் இதை....
பூமியின்
பூ பாதங்களில் பித்த வெடிப்பு
துடிதுடிக்கும் விவசாயியின் இதயம்!
யார் அறிவார் இதை....
பாழ் மனிதா!
காட்டை வெட்டி, விவசாயத்தை அழித்து
கட்டிடம் கட்டுகிறாய் உனக்கு பின்
கட்டிடமும் கல்லும்தான் மிச்சமிருக்கும் காலம்
வெகுதூரமில்லை ....!
உண்ண உணவின்றி மீண்டும் இடிப்பாய் !
கட்டிடத்தை இடித்து விவசாயம் செய்யும்
காலம் வரும் ! மனிதா காலம் வரும்!!
அன்று....
நான் இல்லை என்றாலும் என் சொல்லிருக்கும்.