மழலை செல்வங்கள் !!!

பஞ்சு மிட்டாய் தேகம்
பார்த்தவுடன் சிரிப்பு
பிஞ்சு விரல் தீண்ட
பீர்க்கங்காய் பிடித்தம்
புட்டிப்பால் சக்தியில்
பூவானது உன் வடிவம்
பெயர் சொல்லும் மகவு
பேரின்ப நிகழ்வு
பைந்தமிழை நீயும் படிக்க
பொற்றாமரையில் அமர்ந்திருக்கும்
போதனைகளின் விருட்சத்தில்
பௌர்ணமி ஒளியாய்
படைத்திட்ட தெய்வம் தான்
நம் மழலை செல்வங்கள் !!!