சிங்கள ராணுவம் !

ஈவு இரக்கமற்ற

ஈன பிறவி - நீ

உனக்கு துணிவு இருந்தால்

என் தலைவனிடம்

நேருக்கு நேர்

மோதி பார்த்திருக்கலாம் .

என் இன பெண்களை

நிர்வாணமாக்கி அதில்

குளிர்காய்கிறாய் - நீ

வெற்றி பெற்றேன் என்று

மார் தட்டிய - நீ

ஒருநாள் மண்டிஇடுவாய்

என் தலைவன் பிரபாகரனிடம் .

உன் குல பெண்கள் கருவறையில்

இருக்கும் கருவுக்குகூட

மரியாதை கொடுப்பவன்

என் தலைவன் பிரபாகரன்

ஆனால் நீ

முதுகெலும்பற்ற ஜென்மம்

என்பதால் தான்

என் தம்பி பாலசந்திரனிடம்

காட்டி இருக்கிறாய்

உன் கோழைத்தனத்தை

அப்போதுகூட புறமுதுகை காட்டி

ஓடவில்லை .

நிமிர்ந்து மார்பை காட்டிருக்கிறான்

என் தம்பி பாலசந்திரன்

புலிக்கு பிறந்தது

பூனை ஆகாது

என்பதை நிருபித்திருக்கிறான்

என் தம்பி பாலசந்திரன்

மார் தட்டி சொல்வேண்டா

நான் மானமுள்ள

தமிழன் என்று

எழுதியவர் : நாகராஜன் மா (5-Mar-13, 5:00 pm)
சேர்த்தது : M . Nagarajan
பார்வை : 133

மேலே