விவசாயி...!!!

கலப்பையில் மாடு பூட்டி
கழனிஎங்கும் நெல் தூவி...
உழைப்பை மட்டுமே நம்பி
பொழப்பு நடத்தும் விவசாயிக்கு
வயது அறுபதை தொட்டாலும்
என்றுமே இருபதின் இளமை.....!!

மாதம் மும்மாரி வேணாம்....
வருடம் ஒரு முறையாவது
பெய்ய மாட்டாயா என்று
தலையில் கைவைத்து
வானத்தை பார்த்து
மழை வராத என்றெண்ணி
சிலையாக நிற்கிறான்
தான் தடுக்கி தடுமாறி
தவழ்ந்து விளையாடிய
மண்ணை விட்டு வரமுடியாமல்...

மழை பெய்தால் மட்டுமே
வாழ்க்கை கரைசேர முடியும்
என்று இருக்கும்போது
வட்டிக்கு வாங்கிய காசோ
குட்டி போட்டு குடும்பம் நடத்துகிறது...!!

ஒருவேளை விவசாயத்தை
வரமாக பெற்றதாலோ என்னமோ....
இவன் வாசலில் வறுமை
வலை விரித்தாடுகிறது....!!

லட்சங்களாகவும் கோடிகளாகவும்
லஞ்சம் வாங்கும் அரசியல்
வஞ்சகர்களுக்கு
காலம் முழுதும்
கஷ்டப்படும் உழவனின்
கெஞ்சல்களா கேட்கபோகிறது.....!!

வென்றாலும் வீழ்ந்தாலும்
என்றும் இவன் உழவனே...
இவன் வீழ்ந்த இடத்தில்
புற்கள் முளைப்பதில்லை....மாறாக
வீரப் புதல்வர்கள் பிறப்பார்கள்....!!

எழுதியவர் : மணிகண்டன் ம (5-Mar-13, 5:47 pm)
பார்வை : 101

மேலே