புறக்கணிப்பு....!!!

பகல் முடித்துப் போகும்
பொழுதிடைச் சூரியனின்
அகல் துடைத்து வரும் தென்றல்
கூவும் குயிலொன்றின்
ஓசை சுமந்துவரும் பொழுதினில்.....

(உன்)மனக் கூண்டிலிருந்து
ஒதுக்கப் பட்ட வேதனை
என் நிழலையும்
உண்டுவிட்ட இறுமாப்பில்
இருளாய் என்மீது பரவும்.!

மனந் தேடித் தலைகீழாய்
தவம் செய்தும்
பலனொன்றும் இன்றி
வரமான மெளனங்களுடன்....

குரலிழந்த வெளவாலாய்
சிறகிருந்தும் பறப்பதற்கு
வழிதேடித் தவிக்கின்றேன்...

(நான்)மோதி வீழும் இடங்களில்
தாங்கிக் கொள்ளக்
கரமொன்று - எனக்காகக்
கிடைத்து விடக் கூடாதா..??

எழுதியவர் : கெளரிபாலன் (6-Mar-13, 2:48 am)
பார்வை : 290

மேலே