ஏனோ இந்தக் காதலில் மட்டும்
சுவாசிக்கும் காற்றின் ஏதாவதொரு மூலக்கூறில்
உன் சுவாசமும் கலந்திருக்குமென்று நம்பித்தான்
சுவாசித்துக்கொண்டிருக்கின்றேன்
எதிர்வரும் முகங்களில் எங்காவது தென்படுகிறதா
உன் முகமென்று எதிர்பார்த்துத்தானிருக்கிறேன் தினமும்.
நீளமான இரவுகளில் கண்விழித்து
யதார்த்தத்தை தொலைத்து
நிறைய யோசிப்பது கூட
உனக்கான கவிதைகளுக்குத்தான்.
ஏனோ இந்தக் காதலில் மட்டும்
நினைவுக்காயங்களோடு அதன் வடுக்களும்
வலிக்கவே செய்கின்றன....