தெவிட்டுமோ தெள்ளியதோர் ஞானம்........!

காணாத
காட்சிகளும் உண்டுலகில் ,
கேட்காத கீதைகளும் ஒலித்திடுமே
கேட்பாரற்ற திறனின் வரைவெல்லையில் !

மதித்திடுவோர்
மனமெல்லாம் நஞ்சுமுண்டு ;
மயங்கினால் மதியும் அவரோடு
மறுப்பின்றிப் போவதும் கொஞ்சமுண்டு !

விந்தையில்லை
விலாசமுள்ளப் பூவுலகில் ,
விவரங்கள் யாவும் புள்ளிகளாக
விதித்தவர் யாரோவென அறிவதிலே !

வீணாகும்
வீடுகளைப் பெருக்குதலும் ,
பெரும்பொருள் ஆதாரங்களைப்
பெயர்த்தெடுத்து பொதிந்து வைத்தலும் !

அனுதினம்
அசைபோடும் அனுபவங்கள்
அள்ளித்தரும் எச்சங்களே இயல்பில்
அளவற்ற செல்வமென உணர்ந்திடலாமே !

புரட்டும்
புதியவழித்தடங்களில்
புரிவது எதுவென தெளிதலே
புத்தகத்திற்கீடாதனாய் அறிவினைப் பதியும் !

போதுமெனப்
போகாதே ஒதுங்கியே
அள்ளிப்பருக தீர்த்தமொன்று
அறிவென்னும் கரையில் கைசேர்கையில் !

புதியதும்
புரளுமுன் கைகளில்
புத்தியை செலுத்தும் மார்க்கங்கள்
புதைந்துனக்குள் விளைவிக்கும் திருப்பங்களால் !

தெவிட்டுமோ
தெள்ளியதோர் ஞானம் !
தேய்வது இன்பமென எண்ணித்
தேடிப்பிடித்து அடைந்திட கசக்குமோ !!!

எழுதியவர் : புலமி (6-Mar-13, 11:49 pm)
பார்வை : 132

மேலே