விடியல் தேடுகிறாள் ஓர் விலைமகள்
![](https://eluthu.com/images/loading.gif)
மடியாத மயக்கங்கள்
கண்டேன்
விடியாத இரவுகளில்
நின்றேன்!
வீதியில் உறவுகள்
கொண்டேன்!
பசியில்
பத்தியம் கிடந்தேன்!
சாத்திரம் எரிந்தேன்!!
சத்தியம் மறந்தேன்...!!!
வீதியில் கிடந்தேன்!
வியாபாரம் ஆனேன்!!
விலைக்குப்போனேன்!!!
சாதியை மறந்தேன்....!
தூக்கம் துறந்தேன்......!!
தூக்கில் விழுந்தேன்...!!!
சாமம் பிறந்தேன்....!
வயிற்றில் கரைந்தேன்!!
வஞ்சனை சுமந்தேன்!!!
பகலை புதைத்தேன்...!
இரவை வதைத்தேன்!!
வலியால் சிதைந்தேன்!!!
காலம் கடந்தேன்!
தோல்கள் தளர்ந்தேன்!!
கால்கள் உடைந்தேன்!!!
கைகள் நடந்தேன்!
கண்கள் இழந்தேன்!
பாதைகள் மறந்தேன்!!
பயணங்கள்துறந்தேன்!!!
வயோதிகக் கன்னியாய்
அலைந்தேன்!!
வியாதியாய்
தெருவில் கிடந்தேன்!!!
விரோதியாய்
விடியல் கடந்தேன்!!!
தாயில்
தரையிறங்கினேன்!
தீயில்
கரையேறினேன்!!
பேயாய்
உருமாறினேன்!!!
விடியாத இரவுகளிலே
நொடிந்த கனவுகளோடு
மடிந்து கிடக்கிறேன்
மரணித்த
மயக்கங்களால்........
பயணம் முடித்தேன்
பாவிமகள்!
நான் யார்?