நட்பின் சந்திப்பு

ஒரு தோழியினைக் காண நடைப்பயணத்தில் இருவர்....! மிதிவண்டியில் இருவர்.....!
மோட்டார் வண்டியில் இருவர்.....!
அழகான நினைவுக் காட்சி!
அளவில்லாத மகிழ்ச்சி!
எங்களைக் கண்டதும் என் தோழியின் கண்களிலும் உள்ளத்திலும் நெகிழ்ச்சி...!


நாங்கள் பழகியது மூன்றாண்டுகள்
எங்களை பிரித்தது கல்லூரியின்
கடைசி மூன்று விநாடிகள்....!
அப்பிரிவினால் உண்டான வலிகள் அனைத்தும்
பறந்து போனது எங்கள் சந்திப்பில்.......!
இடியின் ஓசையையே மறைத்தது
நாஙகள் பேசிய வார்த்தைகள்.........!

அந்நிமிடங்கள் என்றும் மறவாதவை...!
அந்நிமிடமே உயிர் பிரிந்து சென்றாலும்
வலியென்பது எங்களுக்குள் வந்திடாது...!
உலகமே இயங்காமல் நாங்கள் மட்டும்
இருப்பது போல் ஓர் உண்ர்வு.........!
அந்த அற்புத நாளே எங்கள் நட்புக்கும்
மகிழ்ச்சிக்கும் மறுபிறப்பு நாளானது.....!

எழுதியவர் : sanmiya (7-Mar-13, 10:49 am)
சேர்த்தது : sanmiya
பார்வை : 240

மேலே