கரடி பொம்மை

அழுது அடம் பிடித்து
ஆர்ப்பாட்டம் பண்ணும்
எல்.கே.ஜி செல்லும்
என் வீட்டு வாண்டுவிடம்...

எல்.கே.ஜி முடிச்சு
யு.கே.ஜி முடிச்சு
ஒண்ணாங்கிளாஸ்ல இருந்து
காலேஜ் வரைக்கும்
நல்லா படிச்சிட்டா
நல்ல வேலை கிடைக்கும்...
நெறைய காசு கிடைக்கும்...
கார் வாங்கலாம்...
வீடு வாங்கலாம்...
ஜாலியா ஊர் சுத்தலாம்
என்றேன் சமாதான நோக்கோடு...

அப்போ...
காலேஜ் எல்லாம் முடிச்சிட்டா
கரடி பொம்மை
எல்லாம் வாங்க முடியுமாப்பா?
என்றது வாண்டு...

நம் மேலாடைகளில்
வாகாய்
உடல் நுழைத்து
பழிப்பு காட்டும் குழந்தை...
அதன்
காலுறைகளைக் கூட
அணியமுடியாத
நம் இயலாமை கண்டு...

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (7-Mar-13, 1:10 pm)
Tanglish : karadi pommai
பார்வை : 306

மேலே